புனித பவுலின் பேராலயம் (கொல்கத்தா)
புனித பவுலின் பேராலயம் கொல்கத்தாவிலுள்ள ஆங்கலிக்கப் பேராலயமாகும். இப்பேராலயம் திருத்தூதர் பவுலுக்கு) அர்ப்பணிப்பட்டுள்ளது. இதன் கோதிக் பாணி கட்டிடக்கலைக்காக அறியப்படுகிறது. 1839 இல் இப்பேராலயத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டு, 1847 இல் கட்டி முடிக்கப்பட்டது கொல்கத்தாவின் மிகப்பெரிய தேவாலயமாகவும் ஆசியாவின் முதலாவது ஆங்கலிக்கத் தேவாலயமாகவும் உள்ளது. மேலும் பிரித்தானியப் பேரரசின் முதல் நாடுகடந்து புதிதாகக் கட்டப்பட்ட முதல் பேராலயமுமாகும். 1800களில் கொல்காத்தாவில் அதிகரித்துவந்த ஐரோப்பியச் சமூகத்தினருக்காக கதீடரல் தெருவில் அமைக்கப்பட்டது.
Read article